இந்திய கிரிக்கெட் வீரர் முகம்மது ஷமி அவரது முன்னாள் மனைவிக்கு மாதம் 4 லட்சம் ரூபாய் ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என்று கொல்கத்தா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
விவாகரத்து வழக்கில் முகம்மது ஷமியின் முன்னாள் மனைவி ஹசின் ஜஹான் மாதம் 10 லட்சம் ரூபாய் ஜீவனாம்சம் கோரிய நிலையில், 1.3 லட்சம் வழங்க அலிபூர் நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது.
இதை எதிர்த்து ஹசின் செய்த மேல் முறையீடு மனுவை விசாரித்த கொல்கத்தா உயர்நீதிமன்றம் மாதம் 4 லட்ச ரூபாய் வழங்க உத்தரவிட்டுள்ளது.