கள்ளக்குறிச்சி அருகே உள்ள மகா காளியம்மன் கோயில் குடமுழுக்கு விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சாத்தனூர் கிராமத்தில் புதிதாக மகா மாரியம்மன் கோயில் கட்டப்பட்டுள்ளது.
இந்த கோயிலின் குடமுழுக்கு விழா ரிஷிவிந்தியம் எம்எல்ஏ வசந்தம் கார்த்திகேயன் ஏற்பாட்டின்படி கோலாகலமாக நடைபெற்றது.
இந்த விழாவில் மாவட்ட ஆட்சியர் பிரசாந்த், உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
குடமுழுக்கு விழாவுக்கான புனிதநீர் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு, 100 செண்டை மேளம், 50 சங்கொலிகள் முழுங்க, 2 யானைகளின் மீது புனிதநீர் ஊர்வலமாகக் கொண்டு வரப்பட்டு, கலசங்களில் ஊற்றப்பட்டது.