ரயில்வேயின் அனைத்து சேவைகளையும் ஒரே செயலி மூலம் பெறும் வசதிகளை மத்திய அரசு அறிமுகப்படுத்தி உள்ளது.
இது தொடர்பாக ரயில்வே துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், அனைத்து சேவைகளையும் ரயில் பயணிகள் சிரமமின்றி பெறும் வகையில் ரயில் ஒன் என்ற செயலி அறிமுகப்படுத்தப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது.
இதில் டிக்கெட் முன்பதிவு செய்வதுடன், அதன் நிலைப்பற்றி அறியும் வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளதாக மத்திய ரயில்வே குறிப்பிட்டுள்ளது.