லாக்கப்-டெத் விவகாரத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா கேள்வி எழுப்பியுள்ளார்.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் அதிமுக -பா.ஜ.க சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், ஹெச்.ராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு தமிழக அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஹெச்.ராஜா, நேர்மையான எஸ்.பியாக இருந்திருந்தால் அஜித்குமாரின் தாயாரிடம் மன்னிப்பு கோரியிருக்க வேண்டும் என்றும், எஸ்.பி-யின் முயற்சியெல்லாம் வழக்கை நீர்த்துப் போகச் செய்யும் நோக்கிலேயே இருந்ததாகக் குற்றம்சாட்டினார்.
முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியில் 25 லாக்-அப் மரணங்கள் அரங்கேற்ற இருப்பதாக ஹெச்.ராஜா குற்றம் சாட்டினார்.