காவலர்கள் தாக்குதலால் உயிரிழந்த அஜித்குமாரின் குடும்பத்தினரை, நடிகரும், தவெக தலைவருமான விஜய் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
அதனை தொடர்ந்து அஜித்குமாரின் உருவப் படத்திற்கு விஜய் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மேலும், அவரது குடும்பத்தினருக்கு 2 லட்சம் ரூபாய் நிதியுதவியையும் விஜய் வழங்கினார்.
இதேபோல், காவலர்கள் தாக்குதலால் உயிரிழந்த அஜித்குமாரின் குடும்பத்தினரை, புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், காவலர்கள் தாக்குதலால் இளைஞர் உயிரிழந்த சம்பவம் கண்டனத்துக்குரியது என தெரிவித்தார்.
மேலும், குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை கிடைக்குமா என்பது சந்தேகமாக உள்ளதாகவும் கிருஷ்ணசாமி கூறினார்.