நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே பணிச்சுமை காரணமாக பெண் சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் மாரடைப்பால் உயிரிழந்தார்.
ராசிபுரம் காவலர் குடியிருப்பில் வசிக்கும் காமாட்சி என்பவர் பேளுக்குறிச்சி காவல் நிலையத்தில் சிறப்பு உதவி காவல் ஆய்வாளராக பணியாற்றி வந்தார். உடல்நலக்குறைவு காரணமாக காமாட்சி ஒருமாத காலமாக விடுமுறை எடுத்ததாக கூறப்படுகிறது. இதனை அடுத்த அவர் பணிக்கு வந்தபோது அவருக்கு தொடர்ந்து இரவுப்பணி வழங்கப்பட்டுள்ளது.
பணிச்சுமை காரணமாக தன்னால் வேலை பார்க்க முடியவில்லை என அரைநாள் விடுமுறை கேட்டால் கூ, விடுமுறை தர முடியாது என்று ஆய்வாளர் கூறியதாக உறவினர்களிடம் அவர் கூறியுள்ளார். இந்நிலையில் இரவு பணி முடித்துவிட்டு விடியற்காலையில் ஓய்வறைக்கு சென்ற காமாட்சி மாரடைப்பு ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.
அவர் இறந்து கிடப்பதை கண்ட உறவினர்கள், பணிச்சுமை காரணமாகத்தான் இறந்து விட்டார் என காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.