சங்கராபுரம் அருகே வீட்டில் தனியாக இருந்த வயதான தம்பதியை தாக்கி, கத்திமுனையில் 200 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள கடுவனூர் கிராமத்தைச் சேர்ந்த கேசரிவர்மன் என்பவர் துபாயில் உள்ள தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வருகிறார். வெளிநாட்டில் குடிபெயர்ந்த கேசரிவர்மனின் 2வது மகளின் மஞ்சள் நீராட்டு விழாவை நடத்துவதற்காக கடுவனூர் கிராமத்தில் உள்ள சொந்த வீட்டிற்கு அவர் வந்துள்ளார்.
வரும் 7ஆம் தேதி மகளின் மஞ்சள் நீராட்டு விழா நடைபெறவுள்ள நிலையில், தனது பாஸ்போர்ட்டை புதுப்பிப்பதற்காக கேசரிவர்மன், குடும்பத்துடன் சென்னைக்கு சென்றாக கூறப்படுகிறது.
இதனை அறிந்த மர்ம நபர்கள் அதிகாலை 3 மணி அளவில் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே சென்று கேசரிவர்மனின் பெற்றோரை தாக்கி, கத்திமுனையில் பீரோவில் வைத்திருந்த 200 சவரன் நகைளை திருடிக் கொண்டு தப்பியோடியுள்ளனர். இதுதொடர்பாக புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.