உயிரிழந்த அஜித்குமாரை போலீசார் தாக்கியதை படம் பிடித்த சக்தீஸ்வரன் தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக டிஜிபிக்கு மெயில் மூலம் கடிதம் அனுப்பி உள்ளார்.
சிவகங்கை மாவட்டம் மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் காவலாளி அஜித் குமார் போலீசாரின் விசாரணையின் போது உயிரிழந்தார். இந்த வழக்கில் முக்கிய சாட்சியான கோயில் பணியாளர் சக்தீஸ்வரன், தனிப்படை காவலர்கள் அஜித்குமாரை தாக்கிய வீடியோவை தனது செல்போனில் பதிவு செய்து.
அதனை நீதிமன்றத்தில் ஆதாரமாக பதிவு செய்தார். இந்நிலையில் கொலை வழக்கில் கைதான ராஜா என்ற தனிப்படை காவலர், ரவுடிகளுடன் தொடர்பில் உள்ளவர் என்பதால் கடந்த 28ஆம் தேதியன்றே தன்னை மிரட்டியதாக சக்தீஸ்வரன் குற்றஞ்சாட்டி உள்ளார்.
இந்நிலையில், தான் நீதிமன்றத்தில் ஆதாரத்தை சமர்ப்பித்துள்ளதால் தனக்கும் தன்னை சார்ந்தோருக்கும் அச்சுறுத்தல் இருப்பதாகவும், எனவே காவல்துறை பாதுகாப்பு அளிக்க வேண்டுமெனவும், டிஜிபிக்கு மெயில் மூலமாக சக்தீஸ்வரன் கடிதம் அனுப்பியுள்ளார்.