இந்தியா – இங்கிலாந்து அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டியில் பும்ரா, குல்தீப் யாதவ் இடம் பெறாதது ஏன் என்பது குறித்து கேப்டன் கில் பதில் அளித்துள்ளார்.
இதுதொடர்பாக பேசிய அவர், இந்திய அணியில் 3 மாற்றங்கள் செய்வதாகவும், நிதிஷ் ரெட்டி, சுந்தர், ஆகாஷ் தீப் ஆகியோர் அணிக்கு வருவதாகவும் தெரிவித்தார்.
பணிச்சுமையை நிர்வகிக்கும் பொருட்டு பும்ரா விளையாடவில்லை என்றும், லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறும் அடுத்தப் போட்டியில் அவரை தாங்கள் அதிகம் பயன்படுத்துவோம் எனவும் கூறினார்.
மேலும், குல்தீப் யாதவை விளையாட வைக்க ஆர்வமாக இருப்பதாகவும், ஆனால் கடந்தப் போட்டியைப் பார்க்கும் போது தங்களுடைய லோயர் ஆர்டர் நன்றாக விளையாடவில்லை என்றும் தெரிவித்தார்.