தென்காசி மாவட்டம் கீழப்புலியூரில் இந்துக்கள் அதிகம் வாழும் பகுதியில் சிறுபான்மையினர் மக்களுக்கு மயானம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து இந்து அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோயில் அருகே மயானம் என்கிற மையவாடி அமைய உள்ளதால் பிற்காலத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளதால் அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இதுதொடர்பாக மனு அளித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் இந்து அமைப்பினர் கிராம நிர்வாக அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து வந்த தென்காசி வட்டாட்சியர் உரிய நடவடிக்கை எடுப்பதாகக் கூறியதையடுத்து போராட்டத்தைக் கைவிட்டுக் கலைந்து சென்றனர்.