ஜுராசிக் வேர்ல்ட் ரீபர்த் திரைப்படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சியில், நடிகை ஸ்கார்லெட் ஜோஹன்சன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ஹாலிவுட் இயக்குநர் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் இயக்கத்தில் 1993-ல் வெளியான படம், ஜுராசிக் பார்க். இந்தப் படம் உலகம் முழுவதும் மிகுந்த வரவேற்பைப் பெற்றது.
பிறகு ஸ்பீல்பெர்க் இந்தப் படங்களிலிருந்து விலகிக் கொண்டார். இந்நிலையில் தற்போது ஜுராசிக் வேர்ல்ட் ரீபர்த் என்ற படத்தை யுனிவர்சல் நிறுவனம் உருவாக்கியுள்ளது.
கேரத் எட்வர்ட்ஸ் இயக்கியுள்ள இதில், ஸ்கார்லெட் ஜோஹன்சன், ஜொனாதன் பெய்லி, மஹெர்ஷாலா அலி நடித்துள்ளனர்.
இந்தப் படம் வரும் 4-ம் தேதி இந்தியாவில் ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு மொழிகளில் ரிலீஸ் ஆகிறது.