இளைஞர் மரண வழக்கு தொடர்பாக இன்று 2-வது நாளாக நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ், விசாரணை நடத்தி வருகிறார்.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தை அடுத்த மடப்புரம் காளியம்மன் கோயிலில் காவலாளியாக பணியாற்றிய அஜித்குமார், விசாரணையின்போது தனிப்படை போலீசார் தாக்கியதில் கடந்த 29-ந்தேதி உயிரிழந்தார்.
இந்த வழக்கை மதுரை மாவட்ட 4-வது கூடுதல் நீதிமன்ற நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ் விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டிருந்தது. அதன்படி, நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ், நேற்று விசாரணையை தொடங்கினார்.
இந்த நிலையில், இளைஞர் மரண வழக்கு தொடர்பாக இன்று 2-வது நாளாக நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ், விசாரணை நடத்தி வருகிறார். அஜித்குமார் தாக்கப்பட்ட இடமான கோயிலின் கோசாலை உள்ளிட்ட இடங்களில் அவர் விசாரணை மேற்கொண்டார்.
மேலும், மடப்புரம் கோயில் நிர்வாகிகள், சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி சென்ற எஸ்பியின் தனிப்பிரிவு எஸ்ஐ-யிடமும் விசாரணை நடத்த இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.