திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அரை மணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்ததால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
புளியரம்பாக்கம், பெருங்களத்தூர், கீ புதுப்பாக்கம், அனக்காவூர், மாமண்டூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அரை மணி நேரத்திற்கும் மேலாகக் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.