மெக்சிகோவில் பழங்கால சடங்கின்படி பெண் முதலையை மேயர் திருமணம் செய்து கொண்டார்.
தெற்கு மெக்ஸிகோவில் உள்ள சான் பெட்ரோ ஹுவாமெலுலாவின் மேயரான டேனியல் குட்டியர்ரெஸ், தனது நகரம் இயற்கை வளத்துடன் செழிப்பாக இருக்க வேண்டி கிறிஸ்தவ முறைப்படி வெள்ளை நிற கவுண் அணிவிக்கப்பட்ட பெண் முதலையைத் திருமணம் செய்து கொண்டார்.
இந்த சடங்கு மெக்சிகோ கலாச்சார நடைமுறையின் ஒரு பகுதியாகும். இந்த திருமண நிகழ்வில் ஏராளமானோர் கலந்து கொண்டு உற்சாகமாக நடனமாடி மகிழ்ந்தனர்.