ஆஸ்திரேலியா நாட்டின் சிட்னி நகரில் சூறாவளிக் காற்றுடன் கனமழை வெளுத்து வாங்கியது.
பலத்த காற்றின் காரணமாகக் குடியிருப்புகள் சேதமடைந்ததோடு, ஏராளமான மரங்கள் சாய்ந்து விழுந்தன. மேலும், பல்வேறு பகுதிகளில் ஏற்பட்ட மின் தடையால், 35 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து, மீட்பு மற்றும் சீரமைப்பு பணியில் மீட்புக் குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.
















