அமெரிக்காவில் இறந்த ஒரு முதியவருக்கு, இறுதி அஞ்சலியின்போது, ஹெலிகாப்டரில் இருந்து கொட்டப்பட்ட பணத்தை ஏராளமான மக்கள் போட்டி போட்டுக் கொண்டு எடுத்தனர்.
அமெரிக்காவின் டெட்ராய்டில் உயிரிழந்த டாரெல் தாமஸ் என்பவரின் இறுதி அஞ்சலியின்போது, அவரது விருப்பத்தை மகன்கள் டாரெல் ஜூனியர் மற்றும் ஜோன்ட் ஆகியோர் நிறைவேற்றினர்.
தங்கள் தந்தையின் கடைசி விருப்பத்தை நிறைவேற்ற, ஹெலிகாப்டர் மூலம் 4 லட்சத்து 27 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பணத்தை வானத்தில் இருந்து கொட்டினர்.
அப்போது, அந்த பகுதியில் இருந்தவர்கள், பணத்தை போட்டி போட்டுக் கொண்டு எடுத்துச் சென்றனர். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.