ஆந்திர மாநிலம் நெல்லூரில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பள்ளியின் ஆசிரியர், சுவர் ஏறி குதித்துத் தப்பி ஓடிய நிலையில், அவரை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
வரிக்குண்டபாடு பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளி ஆசிரியரான வெங்கய்யா, மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வருவதாகப் புகார் எழுந்தது.
இந்நிலையில் பழங்குடியின மாணவி ஒருவர், ஆசிரியர் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாகப் பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த பெற்றோர், பள்ளிக்கு சென்று, வெங்கய்யாவை ஓட ஓட விரட்டி அடித்தனர். இதையடுத்து அவர், சுவர் ஏறிக் குதித்து, அங்கிருந்து தப்பியோடிய நிலையில், போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.