நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகியோர் தொடர்புடைய போதைப் பொருட்கள் கடத்தல் வழக்கில் கைதான 4 பேரையும் போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
போதைப்பொருள் சப்ளை செய்ததாக அதிமுக முன்னாள் நிர்வாகி பிரசாத், கானாவை சேர்ந்த ஜான், கெவின் மற்றும் சேலத்தைச் சேர்ந்த பிரதீப் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
4 பேரிடம் நடத்திய விசாரணையில் அடிப்படையில் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகியோர் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதனிடையே, கொக்கைன் போதைப்பொருள் சப்ளை செய்த வழக்கில் கைதான 4 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்த போலீசார், அவர்களை போதைப் பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
4 பேரையும் 4 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்கச் சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவிட்டது.
இதனை தொடர்ந்து, புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த பிரசாத், ஜான், கெவின், பிரதீப் ஆகிய 4 பேரையும் நுங்கம்பாக்கம் போலீசார் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.