ஒடிசாவில் நகைக் கடைக்குள் புகுந்த கொள்ளையர்கள் பல லட்சம் மதிப்புள்ள நகைகள் மற்றும் பணத்தைக் கொள்ளையடித்துச் சென்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.
கியோஞ்சர் மாவட்டம் ஹரிசந்தன்பூர் பஜாரில் உள்ள நகைக் கடைக்குள் ஹெல்மெட் அணிந்தவாறு துப்பாக்கியுடன் கொள்ளை கும்பல் ஒன்று புகுந்தது.
தொடர்ந்து நகைக் கடை ஊழியர்கள் மற்றும் அங்கிருந்தவர்களிடம் துப்பாக்கியைக் காட்டி மிரட்டிப் பல லட்சம் மதிப்புள்ள நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
இந்த காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்த நிலையில் கொள்ளையர்களை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.