கர்நாடகா மாநிலம் சாம்ராஜ்நகர் அருகே 20-க்கும் மேற்பட்ட குரங்குகள் கொல்லப்பட்டுக் கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கந்தேகாலா கிராமத்தில் சாலையில் வீசப்பட்டுக் கிடந்த இரண்டு சாக்கு மூட்டைகளில், 20-க்கும் மேற்பட்ட குரங்குகள் இறந்தும், சில குரங்குகள் உயிருக்குப் போராடிக் கொண்டும் இருந்தன.
இதுகுறித்து தகவலறிந்து வந்த வனத்துறையினர், உயிருக்குப் போராடிய குரங்குகளை மீட்டு கால்நடை மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.