அஜித்குமார் கொலை வழக்கின் முக்கிய சாட்சியங்களுக்கு உரியப் பாதுகாப்பு அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் சக்தீஸ்வரன் வீட்டில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் காவல்துறை விசாரணையின் போது இளைஞர் உயிரிழந்த விவகாரத்தில் சக்தீஸ்வரன் என்பவர் முக்கிய சாட்சியமாகப் பார்க்கப்படுகிறார்.
அஜீத்குமாரைக் காவலர்கள் தாக்கும் நிகழ்வை அவர் காணொளியாகப் பதிவுசெய்த நிலையில், வழக்கின் முக்கிய ஆதாரமாக அது மாறியது.
இந்த நிலையில், தனக்குக் கொலை மிரட்டல்கள் வருவதாகத் தெரிவித்த சக்தீஸ்வரன், உரியப் பாதுகாப்பு வழங்கக்கூறி தமிழக டிஜிபி-க்கு கடிதம் அனுப்பினார்.
இதைத்தொடர்ந்து டிஜிபி உத்தரவின் பேரில் சக்தீஸ்வரன் வீட்டில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 24 மணி நேரம் சுழற்சி முறையில் காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.