அரசியல் ஆதாயத்திற்காக மட்டுமே உயிரிழந்த அஜித்குமாரின் தாயாரிடம் முதலமைச்சர் ஸ்டாலின் மன்னிப்பு கேட்டதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக சென்னை டிஜிபி அலுவலக வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர்,
அரசியல் ஆதாயத்திற்காக மட்டுமே உயிரிழந்த அஜித்குமாரின் தாயாரிடம் முதலமைச்சர் ஸ்டாலின் மன்னிப்பு கேட்டுள்ளார் என்றும் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட உயிரிழந்த இளைஞரின் தாயாரிடம் முதலமைச்சர் சாரி மட்டும் கேட்டால் போதுமா? என்று ஜெயக்குமார் கேள்வி எழுப்பினார்.
முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யாமலேயே அஜித்குமாரை எப்படி அழைத்துச் சென்று விசாரிக்க முடியும் என்று கேள்வி எழுப்பியவர், அஜித் குமார் மரணத்திற்குத் தார்மீக பொறுப்பேற்று முதலமைச்சர் ஸ்டாலின் பதவி விலக வேண்டும் என்று ஜெயக்குமார் வலியுறுத்தினார்.
லாக்-அப் மரணங்களுக்காக 2026 தேர்தலில் திமுகவுக்கு மக்கள் சரியான பாடம் புகட்டுவர் என்று ஜெயக்குமார் திட்டவட்டமாக கூறினார்.