நகை திருட்டு விவகாரத்தில் இருதரப்பிடமும் காவல்துறை விசாரணை நடத்தியிருக்க வேண்டுமென அஜித்குமாரின் தாயார் மாலதி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தமிழ் ஜனம் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த அவர், எனது மகனை முறையாக விசாரிக்காமல் காவலர்கள் கடுமையாக தாக்கியுள்ளதாக தெரிவித்தார். புகார் கொடுத்தவர் என “இருதரப்பிடமும் காவல்துறை விசாரணை நடத்தி இருக்க வேண்டும் என்றும், ஆனால் காவல்துறையினர் தமது மகனை குறி வைத்து தாக்கியதாக தெரிவித்தார்.
சம்பவம் குறித்து முழுமையாக விசாரித்த பிறகுதான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, தமிழகத்தில் இனி இதுபோன்ற கொடூர சம்பவம் நிகழக்கூடாது என்றும் அவர் கூறினார்.