அஜித்குமாருக்கு கஞ்சா கொடுத்து போலீசார் தாக்கியதாக அவரது உறவினர் மனோஜ்பாபு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,அஜித்துக்கு மிளகாய்ப் பொடி கலந்த தண்ணீரை குடிக்க கொடுத்ததுடன், பிறப்புறுப்பிலும் ஊற்றியதாக தெரிவித்தார்.
ஆட்டோவில் ஏற்றும்போதே அஜித்குமார் உயிரிழந்தது தெரிந்தது என்றும், அஜித்குமார் உயிரிழந்த பிறகுதான் ஆட்டோவில் ஏற்றி கொண்டு சென்றதாகவும் அவர் கூறினார். அஜித்குமார் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவத்தின்போது கோயில் நுழைவுப்பகுதியில் சிசிடிவி கேமரா இருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.