காவலர்கள் தாக்கியதில் உயிரிழந்த அஜித்குமார் மீது புகாரளித்த நிகிதா கூறுவதெல்லாம் பொய்யாகவே இருக்கும் என அவரது முன்னாள் கணவரும், பார்வர்டு பிளாக் கட்சியின் நிறுவனருமான திருமாறன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சிவகங்கை மாவட்டம் மடப்புரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அஜித்குமார் மீது புகாரளித்த நிகிதா தம்முடைய முன்னாள் மனைவி என தெரிவித்தார். நிகிதா கூறுவதெல்லாம் பொய்யாகவே இருக்கும் என்றும், திருமணமான இரவே மண்டபத்தை விட்டு ஓடியவர் நிகிதா என்றும் கூறினார்.
எனது தந்தை மீது கூட நிகிதா பொய் புகார் அளித்ததாகவும், நிகிதா மீதான புகார் ஆவணங்கள் நீதிமன்றத்தில் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
பொய் சொல்வதில் வல்லவரான நிகிதா பிஎச்டி முடித்தவர் என்றும் நிகிதா MBBS படித்த மருத்துவர் அல்ல என்றும் தெரிவித்தார்.