கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி அருகே சிறுவன் காரில் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ள சம்பவத்திற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், முதலமைச்சர் ஸ்டாலினின் ஆட்சியில் எங்கும், எப்போதும், யாருக்கும், யாராலும் பாதுகாப்பு இல்லாத நிலை இருப்பது வெட்கக்கேடானது என விமர்சித்துள்ளார்.
சிறுவனை காரில் கடத்தி கொலை செய்யும் அளவுக்கு குற்றவாளிகளுக்கு அச்சமற்ற நிலை இருப்பது என்பது, காவல்துறையை நிர்வகிக்க வேண்டிய முதலைச்சருக்கு உறுத்தவில்லையா எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
அடிப்படையிலேயே Flawed அரசாக இந்த திமுக அரசு இருப்பதையே இத்தகைய நிகழ்வுகள் உணர்த்துகின்றன எனவும் குற்றம் சாட்டியுள்ளார்.
எனவே, குற்றம் இழைத்தோர் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இபிஎஸ் வலியுறுத்தியுள்ளார்.