சூப்பர் யுனைடெட் ரேபிட் மற்றம் பிளிட்ஸ் செஸ் போட்டியில், உலகின் நம்பர் ஒன் வீரரான மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்தி குகேஷ் முதலிடத்தை பிடித்துள்ளார்.
குரோஷியாவின் ஜாக்ரெப்பில் நடந்த சூப்பர் யுனைடெட் ரேபிட் மற்றம் பிளிட்ஸ் செஸ் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் நான்காவது மற்றும் ஐந்தாவது சுற்றில் உஸ்பெகிஸ்தானின் நோடிர்பெக் அப்துசட்டோரோவ் மற்றும் அமெரிக்கரான ஃபேபியானோ கருவானாவை குகேஷ் வீழ்த்தினார்.
தொடர்ந்து ஆறாவது சுற்றில் உலகின் நம்பர் ஒன் வீரரான நார்வே நாட்டை சேர்ந்த மேக்னஸ் கார்ல்சனை இந்திய வீரர் குகேஷ் எதிர்கொண்டார்.
ஆறாவது சுற்றில் கருப்பு நிற காய்களுடன் விளையாடிய குகேஷ், 49வது நகர்த்தலில் கார்ல்சனை வீழ்த்தி புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை பிடித்து அசத்தி உள்ளார்.