சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே திமுகவினர் அராஜகம் செய்ததாகத் தனியார் கேபிள் ஊழியர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
ஓமலூர் மற்றும் காடையாம்பட்டி அதன் சுற்று வட்டார பகுதிகளில் தனியார் கேபிள் ஆபரேட்டர்கள் சுமார் 300 பேர் பணியாற்றி வருகின்றனர்.
இந்த நிலையில், ஆபரேட்டர்கள் அலட்சியத்தால் சுமார் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளுக்குத் தொலைக்காட்சி ஒளிபரப்பின்றி பொதுமக்கள் அவதியடைந்தனர்.