கூமாபட்டியை தொடர்ந்து மதுரை மாவட்டத்தில் உள்ள குருவித்துறை இணையத்தில் வைரலாகி வருகிறது.
சோழவந்தான் அருகே உள்ள குருவித்துறை பகுதியில் உள்ள சித்தாதிபுரம் வைகை ஆற்றில் விவசாய பாசனத்திற்காகத் தடுப்பணையில் கட்டப்பட்டுள்ளது.
இங்குக் குளிப்பதற்காக விடுமுறை இன்றி வார நாட்களிலும், திண்டுக்கல், மதுரை, தேனி என பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பொதுமக்கள் படையெடுத்த வண்ணம் உள்ளனர்.
அதுமட்டுமின்றி சமூக வலைத்தளங்களில் வீடியோ பதிவிட்டு குருவித்துறை கிராமத்தை கூமாபட்டியை போல் பிரபலப்படுத்தி வருகின்றனர்.