கனகம்மாசத்திரம் காவல் நிலையத்தில் காவரலால் மூன்று பெண்கள் தாக்கப்பட்ட சம்பவத்தில் விரிவான அறிக்கையைத் தாக்கல் செய்ய மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் கனகம்மாசத்திரம் காவல் நிலையத்தில் புகாரளிக்கச் சென்ற 3 பெண்கள் மீது, காவலர் ராமர் என்பவர் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், பெண்கள் மீதான தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கை மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது.
இந்த சம்பந்தம் தொடர்பாக விசாரணை நடத்தி ஆறு வாரங்களில் விரிவான அறிக்கை தாக்கல் செய்யத் திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளார்.