அவிநாசியில் வரதட்சணை கொடுமையால் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் ஜாமின் வழங்க எதிர்ப்பு தெரிவித்து அவரது பெற்றோர் இடையீட்டு மனுத்தாக்கல் செய்தனர்.
திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் வரதட்சணை கொடுமையால் ரிதன்யா என்ற இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார். இந்த வழக்கில், ரிதன்யாவின் கணவர் கவின்குமார், மாமனார் ஈஸ்வரமூர்த்தி ஆகியோர் ஜாமின் கேட்டு மனு தாக்கல் செய்தனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரிதன்யாவின் பெற்றோர் திருப்பூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இடையீட்டு மனுத் தாக்கல் செய்துள்ளனர்.
இந்த மனு மீதான விசாரணையில், கவின்குமார் தரப்பில் கால அவகாசம் கோரப்பட்டதால் விசாரணையை வரும் 7 ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்தார்.