திருப்பூரில் வரதட்சணை கொடுமையால் தற்கொலை செய்து கொண்ட இளம்பெண் ரிதன்யாவின் திருமணத்தில் எடுக்கப்பட்ட வீடியோக்கள் வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
அவிநாசி கைகாட்டி புதூர் பகுதியை சேர்ந்த ரிதன்யாவுக்கு கவின்குமார் என்பவருடன் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில், கவின்குமார் மற்றும் அவரது குடும்பத்தினர் வரதட்சணை கேட்டு கொடுமைப் படுத்தியதால் விஷம் குடித்து ரிதன்யா தற்கொலை செய்துகொண்டார்.
தற்கொலை முன்பு தந்தைக்கு அவர் அனுப்பிய ஆடியோ வெளியாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், திருமணத்தின்போது ரிதன்யாவுக்கு 300 சவரன் நகை, 70 லட்சம் ரூபாய் மதிப்பிலான வால்வோ கார் வரதட்சணையாக கொடுக்கப்பட்டுள்ளன.
வழக்கில் கவின்குமார் அவரது பெற்றோருடன் கைதான நிலையில், ரிதன்யாவின் திருமணத்தில் எடுக்கப்பட்ட வீடியோக்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.