ஸ்பேயினின் ஸ்மோரோ மாகாணத்தில் நடந்த கார் விபத்தில் கால்பந்து வீரர்கள் இரண்டு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
டியோகோ ஜோட்டா மற்றும் அவரது சகோதரர் ஆண்ட்ரே பெலிப் ஆகிய இருவரும் போர்ச்சுகல் நகரில் உள்ள பெனாஃபீல் கால்பந்து கிளப்பிற்காக விளையாடுகின்றனர்.
இந்நிலையில் இருவரும் ஸ்மோரோ மாகாணத்தில் காரில் பயணித்துக் கொண்டிருந்தனர். அப்போது நிகழ்ந்த சாலை விபத்தில் இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.