நாகை மாவட்டம் வேளாங்கண்ணி பேராலயத்திற்கு எதிரே உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றிய ஊழியர்களுக்கும், கடை உரிமையாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தின் ஆண்டு விழா ஆகஸ்ட் மாதம் 29 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்பார்கள் என்பதால், இடையூறாக உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.
அப்போது ஊழியர்களுக்கும் கடை உரிமையாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.