ஜப்பானின் டோகாரா தீவில் கடந்த 2 வாரங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட நிலநடுக்கங்கள் பதிவாகி உள்ளன.
இதில் மிகப் பெரிய நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.5 புள்ளியாகப் பதிவானது. இதனைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படாத நிலையில், எப்போது வேண்டுமானாலும் வெளியேறத் தயாராக இருக்குமாறு பொதுமக்களை அரசாங்கம் அறிவுறுத்தி உள்ளது.
இதற்காக, டோகாரா கடற்கரை பகுதியில் படகுகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. நிலநடுக்கம் காரணமாக டோகாரா தீவில் வசிக்கும் மக்கள் பீதியில் உறைந்துள்ளனர்.