பாமக சட்டமன்ற குழு கொறடாவாக மயிலம் சிவக்குமார் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அக்கட்சியின் வழக்கறிஞர் பாலு தெரிவித்துள்ளார்.
பாமக சட்டமன்ற கட்சி கொறாடா பதவியில் இருந்து சட்டமன்ற உறுப்பினர் அருளை நீக்கியும், புதிய கொறாடாவாக மயிலம் சிவக்குமார் தேர்வு செய்யப்பட்டதற்கான கடிதத்தைச் சட்டப்பேரவைத் தலைவர் அப்பாபுவிடம் அக்கட்சியின் வழக்கறிஞர் பாலு வழங்கினார்.
பின்னர், தலைமைச் செயலக வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கட்சியின் கட்டுப்பாட்டை மீறும் வகையில் செயல்பட்ட அருள், அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
பாமக சட்டமன்ற கட்சி கொறாடாவாக மயிலம் சிவக்குமார் தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பதற்கான கடிதத்தைப் பேரவைத் தலைவரிடம் வழங்கியதாகவும் அவர் கூறினார்.
மேலும், 1995ல் வகுக்கப்பட்ட விதிகளின்படி பாமக செயல்பட்டு வருவதாகவும், 2026ஆம் ஆண்டு ஜுன் வரை அன்புமணி தலைவராகத் தொடர்வதற்கான அங்கீகாரத்தைத் தேர்தல் ஆணையம் வழங்கி உள்ளதாகவும் பாலு தெரிவித்தார்.