நாட்டில் கனமழையால் பாதிக்கப்படும் மாநிலங்களுக்குச் சாத்தியப்படும் அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்யும் என உள்துறை அமைச்சர் அமித்ஷா உறுதியளித்துள்ளார்.
இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அமித்ஷா, கனமழையைத் தொடர்ந்து, குஜராத், இமாச்சலப்பிரதேசம், ராஜஸ்தான், உத்தரகண்ட் மற்றும் சத்தீஸ்கர் மாநில முதல்வர்களுடன் தொலைப்பேசி வாயிலாகப் பேசியதாகத் தெரிவித்துள்ளார்.
மேலும், அந்தந்த மாநிலங்களில் போதுமான எண்ணிக்கையிலான தேசிய பேரிடர் மீட்புப் படை குழுக்கள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும், தேவைப்படும்போது கூடுதல் மீட்பு படைகளை அனுப்ப முடியும் எனவும் அமித்ஷா கூறியுள்ளார்.