அஜித்குமாரின் மரணத்தை எண்ணி தானும் தனது தாயாரும் தினமும் அழுதுகொண்டிருப்பதாக நகை திருடுபோனதாகப் புகார் அளித்த நிகிதா புதிய ஆடியோ வெளியிட்டுள்ளார்.
அந்த ஆடியோவில் தனக்கு IAS, IPS என எந்த உயரதிகாரியையும் தெரியாது எனத் தெரிவித்துள்ள அவர், ஆலம்பட்டி திமுக செயலாளர் சண்முகம்தான் வெறுப்புணர்வால் தன்னைப்பற்றி தவறான தகவல்களைப் பரப்பி வருவதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
அத்துடன் அஜித் குமாரின் தாயாரிடம் மன்னிப்பு கேட்க நினைப்பதாகத் தெரிவித்துள்ள நிகிதா, அஜித்குமாரின் மரணத்திற்கு மிகுந்த வேதனை தெரிவித்துக் கொள்வதாகவும் அந்த ஆடியோவில் கூறியுள்ளார்.