ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே கோயில் பூட்டை உடைத்து திறந்து பொதுமக்கள் வழிபாடு நடத்தினர்.
ஒட்டர்பாளையம் கிராமத்தில் உள்ள அலங்கார மாரியம்மன் கோயிலை நிர்வகிப்பதில் 2018ஆம் ஆண்டு இரு தரப்பினரிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனையடுத்து கடந்தாண்டு வரை ஒரு தரப்பினர் மட்டுமே கோயிலில் வழிபாடு நடத்தி வந்தனர்.
இந்தாண்டு இருதரப்பினரும் ஒன்று கூடி திருவிழா நடத்த பேச்சுவார்த்தை நடைபெற்ற நிலையில், அதில் உடன்பாடு எட்டப்படவில்லை. இந்நிலையில் கிராம மக்கள் ஒன்று கூடி கோயில் பூட்டை உடைத்து அம்மனுக்கு பூஜைகள் செய்து வழிபட்டனர்.