அரக்கோணத்தில் ஒரே இரவில் பல பகுதிகளில் நடைபெற்ற கொள்ளை சம்பவங்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
டவுன்ஹால் தெருவில் உள்ள கடையில் 50 ஆயிரம் ரூபாயும், நேருஜி நகர் பகுதி கடையில் பத்தாயிரம் ரூபாயும் திருட்டு போயுள்ளது.
அதேபோல் சானாத்தி அம்மன் கோயிலில் உண்டியல் காணிக்கையும் திருடப்பட்டுள்ளது. அடுத்தடுத்த கொள்ளை சம்பவங்கள் அப்பகுதி மக்களிடயே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.