திருச்சி மாவட்டம் முசிறி புதிய பேருந்து நிலையத்தில் மேற்கூரை சேதமடைந்து, இடிந்து விழும் நிலையில் இருப்பதால், பயணிகள் அச்சமடைந்துள்ளனர்.
திருச்சி மாவட்டம், முசிறி பேரூராட்சியாக இருந்த பொழுது கடந்த 2001 முதல் 2006 ஆம் ஆண்டுக்குள் பல கோடி ரூபாய் மதிப்பில் பல்வேறு கடை உட் கட்டமைப்புகளுடன் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டதாக கூறுகின்றனர்,
இந்த பேருந்து நிலையத்திற்கு சேலம் முதல் நாமக்கல் வழியாக செல்லும் அனைத்து பேருந்துகளும் உள்ளே சென்று செல்கிறது, அதனால் பேருந்து நிலையப் பகுதியில் முசிறி சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் தினமும் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பேருந்து நிலையத்தில் நின்று பேருந்தில் ஏறி செல்கின்றனர், பயணிகள் நிற்கும்பொழுது பேருந்து நிலையம் மேற்கூரைகள் இடிந்து விழுவதாக கூறுகின்றனர்
ஏதேனும் அசம்பாவித சம்பவம் நிகழ்வதற்கு முன்னதாக, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.