டிஎன்பிஎல் தொடரின் இறுதிப்போட்டிக்கு திண்டுக்கல் அணி முன்னேறியது.
இறுதிப்போட்டிக்கான 2வது தகுதி சுற்று ஆட்டத்தில் சேப்பாக் மற்றும் திண்டுக்கல் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த சேப்பாக் அணியில் பாபா அபராஜித் 67 ரன்களும், ஜெகதீசன் 81 ரன்களும் குவித்து அணிக்கு வலு சேர்த்தனர்.
விஜய் சங்கர் முதல் பந்திலேயே விக்கெட்டை பறிகொடுத்து பெவிலியன் திரும்பினார். 20 ஓவர்கள் முடிவில் அந்த அணி, 7 விக்கெட் இழப்புக்கு 178 ரன்கள் எடுத்தது.
பின்னர் களமிறங்கிய திண்டுக்கல்அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ரவிச்சந்திரன் அஸ்வின் 21 ரன்களும், சிவம் சிங் 27 ரன்களும் எடுத்தனர். மிக சிறப்பாக விளையாடிய விமல் குமார் 30 பந்துகளில் 65 ரன்கள் எடுத்து அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றார்.
18.4 ஓவர்களிலேயே இலக்கை எட்டிய திண்டுக்கல்அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்ற திண்டுக்கல் அணி, வெற்றி கோப்பையை வெல்ல திருப்பூர் அணியுடன் பலப்பரீட்சை நடத்தவுள்ளது.