திருச்சி மாவட்டம் தாளக்குடி ஊராட்சியில் முறையாக குடிநீர் வழங்கப்படுவதில்லை என பொதுமக்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர்.
தாளக்குடி ஊராட்சியில் கீரமங்கலம், கிருஷ்ணா நகர், முத்தமிழ் நகர், அழகு நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.
ஆண்டுதோறும் முறையாக தண்ணீர் வரி செலுத்தி வரும் இந்த பகுதிகளுக்கு கடந்த 3 மாதங்களாக குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக வேதனை தெரிவித்த கிராம மக்கள் முக்கிய பிரமுகர்களின் வீடுகளுக்கும் அவர்களின் விவசாயத்திற்கும் மட்டுமே தண்ணீர் வழங்கப்படுவதாக குற்றஞ்சாட்டினர்.