மணிப்பூரில் காவல்துறை நடத்திய சோதனையில் பயங்கர ஆயுதங்கள், வெடிமருந்துகள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டன.
மணிப்பூர் மாநிலத்தில் உள்ள மலைப்பகுதிகளில் போலீசார், பாதுகாப்பு படையினர் உள்ளிட்டோர் தேடுதல் வேட்டை நடத்தினர்.
அப்போது, நுற்றுக்கும் மேற்பட்ட துப்பாக்கிகள், வெடிமருந்துகள், லாஞ்சர்கள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டன. மற்ற பகுதிகளிலும் சோதனை நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.