கோவை எருக்கம்பெனி பகுதியில் சென்று கொண்டிருந்த கார், திடீரென தீப்பிடித்து எரிந்து சேதமானது.
ஆல்டோ ரக கார் ஒன்று கோவை எருக்கம்பெனி பகுதி அருகே சென்று கொண்டிருந்தது அப்போது வாகனத்திற்கு பெட்ரோல் நிரப்பிய காரின் உரிமையாளர், மீண்டும் அதனை இயக்கியுள்ளார்.
திடீரென காரின் முன்பகுதியில் இருந்து கரும்புகை எழுந்ததால் அதிர்ச்சியடைந்த உரிமையாளர், காரில் இருந்து வெளியே தப்பியோடினார். இதுகுறித்து அறிந்த தீயணைப்பு துறையினர், தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இருப்பினும் கார் முழுவதும் எரிந்து சேதமடைந்தது.