பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அருகே இருசக்கர வாகனம் மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் கணவன்-மனைவி சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பெரிய வடகரை கிராமத்தைச் சேர்ந்த பாலாஜியும், அவரது மனைவி சித்ராவும் இருசக்கர வாகனத்தில், வேப்பந்தட்டைக்கு சென்று கொண்டிருந்தனர்.
வெண்பாவூர் வனப்பகுதியில் வளைவில் திரும்பும்போது, எதிரே வந்த அரசு பேருந்து இருசக்கர வாகனம் மீது மோதியது.
இதில் பாலாஜியும், அவரது மனைவி சித்ராவும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விபத்து தொடர்பாக அரசு பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர் ஆகியோரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.