கேரள மாநிலம் மூணாறு அருகே சுற்றுலா வாகனத்தில் இளைஞர்கள் சாகச பயணம் மேற்கொண்ட வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
கொச்சி – தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் மூணாறு பகுதியில் வாகன விதிமீறல்கள் அதிகரித்து வருவதாகப் பொதுமக்கள் குற்றஞ்சாட்டி வந்தனர்.
இந்நிலையில், கொச்சி – தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் பூப்பாறை அருகே தமிழக சுற்றுலாப் பயணிகள் வேனில் சாகச பயணம் மேற்கொண்டுள்ளனர்.
இளைஞர்கள் வேன் மேல் நின்றவாறும், படிக்கட்டில் தொங்கியவாறும் ஆபத்தான செயலில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலான நிலையில், சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.