ஒடிசா மாநிலம் புரியில் உள்ள குண்டிச்சா கோயிலின் அடப்பா மண்டபத்தில் சுவாமி தரிசனத்துக்காக ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.
சமீபத்தில் நடைபெற்ற ரத யாத்திரைக்குப் பின்னதாக குண்டிச்சா கோயிலிலேயே ஜெகந்நாதர், பாலபத்ரா மற்றும் சுபத்ரா ஆகியோரின் விக்கிரகங்கள் வைக்கப்பட்டுள்ளன.
இந்த விழா நிறைவடையவுள்ள நிலையிலேயே நீண்ட வரிசையையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் கால்கடுக்க நின்று சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.