மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் லாக்கப் கொலை வழக்கில் தனி நீதிபதி திருப்புவனம் காவல் நிலையத்தில் நேரில் விசாரணை நடத்தினார்.
அஜித்குமார் லாக்கப் கொலை வழக்கினை மதுரை மாவட்ட 4 ஆவது கூடுதல் நீதிமன்ற நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ் விசாரித்து வருகிறார்.
வழக்கு தொடர்பான ஆதாரங்கள், மற்றும் சாட்சியங்களையும் அவர் சேகரித்து வருகிறார். தொடர்ந்து 4-வது நாளாகத் தொடங்கிய விசாரணையில், நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ் திருப்புவனம் காவல் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார்.
தொடர்ந்து இந்த வழக்கில் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட மானாமதுரை டிஎஸ்பி சண்முக சுந்தரம் நீதிபதி முன் நேரில் ஆஜரானார்.
அவரிடம் நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை மேற்கொண்டார்.