ஒருதலைபட்சமாகச் செயல்படும் ஓசூர் மாநகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து, விரைவில் போராட்டம் நடத்தப்படும் என்று அதிமுக கவுன்சிலர் தெரிவித்துள்ளார்.
ஓசூர் மாநகராட்சி மேயர் சத்யா தலைமையில் நடைபெற்ற மாமன்ற கூட்டத்தில், அஜித்குமார் மரணத்திற்கு நீதி கேட்கும் விதமாக, அதிமுக கவுன்சிலர்கள் பேட்ச் அணிந்து பங்கேற்றனர்.
பின்னர் பேட்டியளித்த அதிமுக கவுன்சிலர் ஜெயபிரகாஷ், மாமன்ற கூட்டத்தில் பத்திரிகையாளர்கள் புகைப்படம், வீடியோ எடுக்க அனுமதி மறுப்பது ஏன் எனக் கேள்வி எழுப்பினார். மேலும், மாநகராட்சி நிர்வாகம் ஒரு தலைப்பட்சமாக செயல்படுவதாக அவர் குற்றம் சாட்டினார்.